A Uncategorised

Anaadhaigalin Dheivamae

அனாதைகளின் தெய்வமே

அனாதைகளின் தெய்வமே
ஆதரவற்றோரின் தெய்வமே
சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்
நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே

சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள்
எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே

ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது அணைக்கிறீர்
இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்
காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே