அண்ணாச்சி அண்ணாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
புதுசு புதுசா போதனை
அதை நெனச்சி பார்த்தா
ரொம்ப வேதனை
இதை என்னண்ணு கேட்க யாருமில்ல
இந்த தப்ப சுட்டி காட்டினா
பெருந்தொல்லை
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
வீட்டுல வம்பு தும்பு நடந்தா
அதை சபையில ஞாயம் கேட்க வரலாம்
ஆனா சபையிலயே சண்டை நடந்தா
அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம்
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
சபைக்குள்ள ஜாதி வந்துருச்சீ
கல்லறை வரைக்கும்
அது வந்து நின்னுருச்சீ
யூதனென்றும் இல்லையே
கிரேக்கனென்றும் இல்லையே
ஆண்டவர் பார்க்கல ஜாதிய
ஏன் யா கெடுக்குற நீதிய
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
ஒர்ஷிப் லீடர் (Worship Leader) இங்க ஹீரோ (Hero)
சபையில் ஆண்டவரு Positionu Zero
இங்க மகிமைய பெறுவது யாரோ
இந்த சபையின் நிலைய சிந்திப்பீரோ
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
பணத்தா கொடுத்தா அது போதும்
வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும்
கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
இந்த அவல நிலை என்னைக்கு மாறும்
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே – (உங்க சபைய)