அற்புதங்கள் செய்கின்ற ஈஸா
அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி
அன்றைக்கு மட்டுமல்ல
இன்றைக்கும் நம்புவோர்க்கு
அற்புதம் செய்வார்
இலவசமாய் பேயோட்டும் ஈஸா மஸி
நோய் பிணிகள் போக்கும் ஈஸா மஸி
கடன் தொல்லை போக்குகின்ற ஈஸா மஸி
நம்பினோரை வாழவைக்கும் ஈஸா மஸி
சைத்தானின் தந்திரங்கள் முறியடித்தவர்
பரலோகம் போவதற்கு வழியை சொன்னவர்
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்தவர்
கருணை வடிவமாக வந்த ஈஸா மஸி
கடவுளையும் மனிதனையும் இணைக்க வந்தவர்
கடவுளோடு கடவுளாக இணைந்து நிற்பவர்
கடவுளுடைய அன்பை முழுதும் புரிய வைத்தவர்
உயிரை தந்து நம்மை காத்த ஈஸா மஸி