Ummaiyanri Ulaginil
உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என் உடலும் உயிரும் நீர்தானய்யா உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா நீரே என் கண்கண்ட தெய்வம் நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம் பாதை மாறிய ஆட்டைப் போல் நானும் பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார் நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார் வாழ எனக்கு வழி காட்டீனீரே உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே…