எகிப்திலிருந்து கானானுக்கு
எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே – உமக்கு
கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா
பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது கர்த்தரை மனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா
வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா