இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா
இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா
வரம் எனக்குத்தா இயேசு நாதா
கண்ணயர்ந்து நான் உறங்கும் பொழுதும் கனவும் நீயே இயேசுநாதா
உமைப்பிரிந்து ஒரு பொழுதும் வாழ்வதறியேனே
உமக்கு எங்கும் சாட்சி பகர்வேன்
நீர் கொடுக்கும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் நாளும்
உமக்காக சுமந்து வருவேன்
சொந்தமென்று சொல்வதற்கு நீர் ஒருவர் போதும் இங்கு
உம்மைப் பின் செல்பவர்கட்கு பெருமை அதுவே
பந்தமொன்று வேறெதற்கு திருச்சபையின் நிழலிருக்கு
நாளும் நம்மை அர்ப்பணித்தால் மீட்பு அதுவே
ஒரு கோடி சுகமெனக்கு கிடைத்திருந்தும் அமைதியில்லை
மனம் தினமும் உம் நினைவில் லயித்திருக்க திழைத்திருக்க
வரமெனக்குத்தா இயேசுநாதா
உம்மை மட்டும் வணங்குவதும் உம்மை விசுவாசிப்பதும்
உம் பெயரைப் போற்றுவதும் மகிழ்ச்சி தருமே
ஆலயத்தின் சந்நிதியில் அமைதியுடன் நான் அமர்ந்து
உம்மிடத்தில் பேசுவதும் ஊவகைதருமே
உறங்காத நினைவுகளையும் உறங்கிவிட்ட செவிகளையும்
இருமிவிட்ட இதயத்தையும் உம்மருளால் மாற்றிவிட
வரமெனக்குத்தா இயேசுநாதா