இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்
அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்
பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்
இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்