இறைவன் நமக்கு ஒருவரே
இறைவன் நமக்கு ஒருவரே
அவர் மாறாத தன்மை உள்ளவரே
குறைகள் நீக்கும் நல்லவரே
அவர் சீரான வாழ்வு தருவாரே
விடிவும் முடிவும் ஒருவரே
பாவ வினை தீர்க்கும் அவர்தான் இயேசுவே
உறவும் துணையும் அவர்தாமே
நம்மை காத்திடும் தெய்வம் இயேசுவே
வேண்டும் வரங்களை தருவாரே
நம் வாழ்வினை வளமாகச் செய்வாரே
வேண்டிடும் மனமும் அருள்வாரே
எந்நாளுமே அருள்மழை பொழிவாரே