I

Isravelin Raajavae En Thevanaam

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம்

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே -4
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்க்காக

திருக்கரம் என்னைத் தாங்கி
கடும் பிரச்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்க்கு
பெலத்தை நீர் தந்ததற்க்காய்

எதிர்க்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம்பண்ணினீர்

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன்