J

Jaathi Paarkum

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே
நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா
ஜாதி பேயை காலின் கீழ்
மிதித்தவன்தான் உயிருள்ள கிறிஸ்தவன்

யூதன் என்றும் இல்லை
கிரேக்கன் என்றும் இல்லை
மேல்ஜாதி என்றும் இல்லை
கீழ்ஜாதி என்றும் இல்லை
ஆரியன் என்றும் இல்லை
திராவிடன் என்றும் இல்லை
இந்தியன் என்றும் இல்லை
அந்நியன் என்றும் இல்லை
எல்லா மனிதரும் இயேசு கிறிஸ்துவில்
ஒரு தாய் மக்கள்தான்

ஆசரிப்பு கூடாரத்தின்
details முழுதும் படித்துவிட்டோம்
வெளிப்படுத்தல் கானான் பயணம்
Bible study யும் முடித்துவிட்டோம்
கல்யாணத்தில் ஜாதி பிசாசு ஆடுதே
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்குத் தேவையா

இயேசு உலகத்தில் வந்தாரே
ஒன்றாய் இருக்கச் சொன்னாரே
இயேசுவின் சீடரின் அடையாளம்
அன்பாயிருப்பது மட்டும் தான்
ஒன்றாக இணைந்து இயேசுவின்
உடலில் இணைந்திருப்போம்
ஒன்றே குலம் என்று உரத்த குரலில்
முழங்கிடுவோம்

சமாரியர் என்னும் மக்களிடம்
யூதர் சம்பந்தம் கலப்பதில்லை
இயேசுகிறிஸ்து அங்கே சென்று
தண்ணீர் வாங்கி குடித்தாரே
ஜாதி பேயின் தலையை
காலால் மிதித்தாரே
பிரிவினை சுவரை தகர்த்து
மனிதனை இணைத்தாரே