J

Jeeva Vaasanai Jeeva

ஜீவ வாசனை ஜீவ வாசனை

ஜீவ வாசனை ஜீவ வாசனை
பாவி என்னிலே வீசச் செய்யுமே
ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய்
பாரில் எங்கிலும் வாழ செய்யுமே
ஆகாகா அல்லேலூயா – 4 x

பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும்
போலி பக்தரின் சாயல் வேண்டாமே
தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய்
நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே
ஆகாகா அல்லேலூயா – 4 x

திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம்
கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே
இலாப நோக்கின்றி பாசம் காட்டிடும்
தியாக ரூபமாய் என்னை மாற்றுமே
ஆகாகா அல்லேலூயா – 4 x

மத்திய மாநிலம் ஆளும் அனைவரும்
பற்பல பாஷை ஜாதி யாவரும்
நித்திய ராஜிய பாக்கியம் அடைந்திட
பத்தன் பவுலைப்போல் என்னை வனையுமே
ஆகாகா அல்லேலூயா – 4 x