கொக்கரக்கோ! கொக்கரக்கோ!
கொக்கரக்கோ! கொக்கரக்கோ! என்று சேவல் கூவுது
அதிகாலையிலே கண் விழித்து கடவுளைத் தான் தேடுது
கொக்கரக்கோ பாஷையிலே அல்லேலூயா பாடுது
ஜீவன் கொடுத்த இயேசுவுக்கு நன்றி சொல்லி துதிக்குது
தூக்கம் வெறுக்குது தூங்க மறுக்குது
தூங்குவொரை சேவல் எழுப்பிடுது
காலை நேரம் இன்ப ஜெப தியானம் என்று பாடுது
கடமைகளை மறந்து தூங்கும் மனித இனத்தை எழுப்புது
அதிகாலை வேளையில் ஆண்டவர் இயேசுவை
தேடினால் கண்டடைவோம் என்றாரே
ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்த சேவலும்
அல்லேலூயா! ஆல்லேலூயா! என்று கூவி அழைக்குது
அற்புதங்கள் செய்த தாம் தேவாதி தேவனை
அறியேன் என்று சொன்ன பேதுருவை
ஆண்டவராம் இயேசுவை நீ மறுதலிக்கலாகுமோ
அவர் சொன்ன வார்த்தை என்றும் – பொய்யாகிப் போகுமோ
பேதுருவைப் பார்த்து சேவல் மூன்று முறை கூவுது