மணவாட்டியே என் சபையே
மணவாட்டியே என் சபையே
விழித்தெழு சீயோன் திருச்சபையே
உன்னில் மகிமை அடைந்திடவே
உன்னை பூவினில் கண்டெடுத்தேன்
உள்ளான அழகு என் பிரியம்
உபதேசத்தில் நிலைத்திருப்பாய்
என் பிரியமே ரூபவதி
உன்னில் நான் மகிழ்ந்திடுவேன்
கூர்மையும் புதிதும் யந்திரமாய்
மலைகளை நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய் குன்றுகளை
பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே
உந்தனின் கிரியை நான் அறிவேன்
உண்மை ஊழியம் செய்திடுவாய்
ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்
உன்னை நான் கனம் பண்ணுவேன்