நாங்க உங்களைத்தான் நம்பி
நாங்க உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்
எங்க இயேசப்பா
எங்க நெஞ்சமெல்லாம் அறிந்த தெய்வமே
எங்க இயேசப்பா
கைவிடாமல் கலங்கவிடாமல் கடைசி
வரையிலும் காக்கின்ற தெய்வம்
போகும் வழியில் தளந்துவிடாமல் தோளில்
தூக்கி சுமக்கின்ற தெய்வம் இயேசையா
சொந்தங்களும் பந்தங்களும் வெறுக்கையிலேயே
உங்களை தான் நம்பி இருக்கிறோம்
சொந்தமென்று சொல்லிக்கொள்ள
யாரும் இல்லை என்றாலும் இயேசப்பா
உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்
சிறுபான்மை என்று சொல்லி நசுக்க படுக்கையிலே
உங்களை தான் நம்பி இருக்கிறோம்
ஜாதி வெறி மத வெறி மொழி வெறி
அகன்றிட வேண்டுமே
உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்
குழப்பத்தின் மத்தியினில் திணறும்போது
உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்
எந்த வழி நல்ல வழி என்று
எம்மை நடத்திடும் தெய்வமே
உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்