N

Nanri Nanri Nanri

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே