நீ போகும் பாதை எல்லாம்
நீ போகும் பாதை எல்லாம் – உன் நேசர் கூட வருவார்
நீ காணும் தேசமெல்லாம் – உன் இயேசு தந்திடுவார்
தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க – நீங்க
தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – நீ போகும்
கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட
கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும்
நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு
நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும்
உன்னோட கண்ணீரை மாற்றுவார்
நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார்
கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு
உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு
உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே – ஒரு
வார்த்தை அவர் சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே
வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும்
வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய் – மாறும்
உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார்
வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார் – உன்னை
வற்றாத நீருற்றாய் மாற்றுவார்