N

Nee Thedum Nimathiyai

நீ தேடும் நிம்மதியை என் இயேசு

நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார்
நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார்
நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை – காத்திடுவார்
நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே – இதை
நீயும் இன்று மறந்திட்டாலே – நிம்மதி வாழ்வினில் இல்லையே

வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம்
வேதனை வியாகுலம் தீராத சோதனை
அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே – நிற்கின்றார்
அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்

கலங்காதே என் நண்பனே கண்ணீரை சிந்தாதே
உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே
உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே
நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு

உலகத்தின் மேன்மை செல்வம் – ஒன்றுக்கும் உதவாது
உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது
இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார்
நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்