ஓசான்னா ஓசான்னா தாவீதின்
ஓசான்னா ஓசான்னா தாவீதின்
குமாரனுக்கு ஓசான்னா
ஓசான்னா ஓசான்னா உன்னதத்தில்
ஓசான்னா இயேசுவுக்கு ஓசான்னா
கழுதை குட்டியாம்
மரியின் மீது பவனி வரும்
கர்த்தாதி கர்த்தனாம்
இயேசு ராஜனுக்கு ஓசன்னா
ஓசன்னா பாடுங்கள்
இயேசுவை தேடுங்கள்
பாசம் வைத்தவர் பவனி வருகிறார்
துன்பங்கள் வரலாம் துயரங்களைத் தரலாம்
தொல்லகள் கஷ்டங்கள் சூழ்ந்துன்னை நெருக்கிடலாம்
தோல்விகள் வந்தாலும் ஜெயமாய் மாற்றுவார்
துவண்டு போகாதே தூயவர் வருகிறார்
தூற்றுவோர் மத்தியில் என்னை
தேற்ற எவருமில்லை என்று
நீ திகையாதே என்னை தேற்றும்
கிறிஸ்து உண்டு நம்பிவா இயேசுவை நன்மைகள் பெறுவாய்
நல்ல சமயமே நாடிவா இயேசுவை
சோதனை நேரத்தில் துணையாக வந்திடுவார்
வேதனை வந்தாலும் கலங்காதே என்றுரைப்பார்
சந்தோஷ நாயகன் சமாதானப்பிரபுவாய்
உனக்காய் வருகிறார் உன்னை உயர்த்துவார்