ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே
ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் – தந்து
உம்மை தினம்தோறும் நான் பாடுவேன்
பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய்
பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள்
பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள்
அந்தஷணமே குணமடைந்தாள்
கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே
திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே
ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார்
தண்ணீரை ரசமாக்கினார்
எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே
எண்ணிடக் கூடுமோ என் வாழ்நாளும் போதுமோ
இயேசுவை அன்றி நான் யாரைப் பாடுவேன்
என் தேவன் இவரைப் பாடுவேன்