தனிமையாய் அழுகின்றாயோ
தனிமையாய் அழுகின்றாயோ
அழைத்தவர் நானல்லவோ
கலங்கிடாதே மகனே எந்தன்
தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே என் மகளே எந்தன்
நெஞ்சில் அனைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ
இன்றுவரை உந்தன் வாழ்வில்
என்றேனும் கை விட்டேனோ
வென்று வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால்
என் அன்பை நன்கு அறிவாய்
எவைகள் உன் தேவையென்று
என் ஞானம் அறிந்திடாதோ
உந்தன் ஏக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது