T

Theeya Manathai Matra Varum

தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே
தூய ஆவியே கன நேய மேவியே

மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்
மாளுஞ் சாவிதால் மிக மாயும் பாவி நான்

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே
திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும்  தஞ்சமே

பரத்தை நோக்க மனம் அற்றேனே பதடிதான் ஐயா
பதடிதான் ஐயா  ஒரு பாவி நான் ஐயா

ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே
இரந்து கெஞ்சவே தினம் இதயம் அஞ்சவே

புதிய சிந்தை புதிய ஆசை புதுப்பித்தாக்கவே
புதுப்பித்தாக்கவே அதைப் புகழ்ந்து காக்கவே

கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே
கீதம் பாடவே அவர் கிருபை தேடவே

தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே
தேட்டம் தோன்றவே மிகு தெளிவு வேண்டவே

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே
ஜெபித்துப் போற்றவே மிக சிறப்பாய் ஏற்றவே