U

Um Sitham Niraivera

உம் சித்தம் நிறைவேற

உம் சித்தம் நிறைவேற
என்னை அழைத்தீர் இயேசுவே
உம் சித்தம் செய்திட
என்னைப் படைக்கிறேன் இயேசுவே

உங்க முகத்தைப் பார்க்கணும்
இன்னும் உமக்காய் எழும்பணும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே

ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை என் இயேசுவுக்கே ஓ….