U

Unnaku Othasai Varum

உனக்கொத்தாசை வரும் நல் உயர்

உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ
தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே

வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்
மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ?

காலைத் தள்ளாடவொட்டார் கரத்தைத் தளரவொட்டார்
மாலை உறங்கமாட்டார் மறதியாய்ப் போக மாட்டார்

கர்த்தருனைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம்
நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம்

பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும்
துயர் தருவதுமில்லை துன்பம் செய்வதுமில்லை

தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல்
தாங்குவார் தூதர் கோடி தாளிடறாதபடி

துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்
இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே

போக்கும் ஆசீர்வாதமாம் வரத்தும் ஆசீர்வாதமாம்
காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே