வா பாவி மலைத்து நில்லாதே வா
வா பாவி மலைத்து நில்லாதே வா
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
உள்ளபடி வாவேன்
உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் பாவி, வா
கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா
விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன்
என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே
வாராயோ பாவி?