V

Vazhiyum Neerae Oliyum

வழியும் நீரே ஒளியும் நீரே

வழியும் நீரே ஒளியும் நீரே
ஜீவனும் நீரே தேவனும் நீரே
நம்பி வந்தேன்  நாயகன் இயேசுவே
என்றும் எந்தனின் துணை நீரே

நானே வழியும் சத்தியம் ஜீவன்
என்று உரைத்த  எந்தன் இயேசுவே
மனதின் இருளை போக்கிட வந்த
மகிமை நிறைந்த தேவ தேவனே

நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி
மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே
எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே
எந்தன் மேன்மை இயேசு தேவனே

உந்தன் வாக்கு எந்தனின் தீபம்
என்னை தந்துமே உம்மை சாருவேன்
உந்தனின் பாதை என்றும் செல்லுவேன்
நித்திய ராஜனே இயேசு தேவனே

மகிமை தங்கும் உந்தன் சமுகம்
என்றும் என்னை தேற்றி ஆற்றுதே
கலங்காமல் பதறாமல்
உந்தன் பாதை என்றும் செல்லுவேன்