A

Aararo Paadungal

ஆராரோ பாடுங்கள்

ஆராரோ பாடுங்கள்
அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று
அல்லேலூயா பாடிடுங்கள்

அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு

முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே