A

Aarathanaikku Thaguthiyana

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
முழு உலகத்திற்கும் பொதுவான
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே

இயேசு நீர் மாத்ரமே…

அன்பு என்றால் என்னவென்று
சொல்லித் தந்த தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
தம்மை நம்பி வருபவர்கள்
எந்த மதத்து மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே

பாவத்தை சுட்டிக்காட்டி
கண்டித்துணர்த்தும் தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற
தெய்வம் நீர் மாத்ரமே

சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு
உரியவர் இயேசு நீர் மாத்ரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பரலோகம் போவதற்கு வழி காட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
என்ற வேறுபாட்டை வென்ற தெய்வமே
மனித நேயம் இல்லாத மதவாத உலகத்துக்கு
மனித நேயம் சொல்லித் தந்தவரே
சமத்துவம் சமதர்மம் நிலைநாட்ட
உயிரைத் தந்த உண்மை தெய்வமே