ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல
ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே (2)
தற்கொலைகள் நரபலிகள் ஒழியுமா ஒழியுமே
ஜல்லிக்கட்டு சாவை தடுக்க முடியுமா முடியுமே
வன்முறைக்கு முடிவுகட்ட முடியுமா முடியுமே
காந்தி சொன்ன அகிம்சைக் கொள்கை
சத்தியமா சாத்தியமே
ஜாதி சண்டை கட்சி சண்டை ஒழியுமா ஒழியுமே
குடிவெறிகள் அடிதடிகள் மறையுமா மறையுமே
பாரதியின் கனவு நனைவாய் மாறுமா மாறுமே
அமைதியான இந்தியாவும் பாத்திமா சாத்திமே
திருமணத்தில் தடைகள் மாற முடியுமா முடியுமே
வரதட்சனை கொடுமை மாற முடியுமா முடியுமே
மலட்டு தன்மை மாறி குழந்தை கிடைக்குமா கிடைக்குமே
பிரிந்து போன குடும்பம் ஒன்று சேருமா சேருமே.
வேலையில்லா திண்டாட்டம் ஒழியுமா ஒழியுமே
கெட்ட கனவு பேய் கனவு அகலுமா அகலுமே
கடன் தொல்லை கஷ்டங்கள் அகலுமா அகலுமே
வறுமை மாறி செழிப்பு மலர முடியுமா முடியுமே