அமலா தயாபரா அருள்கூர்
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா
சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும் ஆறுங்கடந்த
அந்தம் அடி நடு இல்லாத் தற்பரன் ஆதி
சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி
ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத
காணப்படா அரூப கருணைச் சுய சொரூப
தோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப
சத்ய வசன நேயா சமஸ்த புண்ய சகாயா
கர்த்தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா
எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான துல்லிபத் தொன்றாம் மேலான
கருணாகரா உப காரா நிராகரா
பரமேசுரா கிருபாகரா சர்வேசுரா