அன்பான இயேசுவின் அன்புதான்
அன்பான இயேசுவின் அன்புதான்
உலகத்தில் மெய்யான அன்பு
தேடி வந்து என்னை கண்டு
மீட்ட இரட்சகர் அன்பு
நீடிய சாந்தம் தயவுள்ளது
தன்னைப் புகழாது பொறாமையில்லை
சினமடையாது தீங்கு நினையாது
சத்தியத்தில் அன்பு சந்தோஷப்படும்
அன்பு திரளான பாவம் மூடும்
பூரண அன்பே பயம் விலக்கும்
பரிசுத்தஆவியால் தேவ அன்பை எங்கள்
உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே