P

Pentecostae Naazhlil

பெந்தெகொஸ்தே நாளில் வந்தது

பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போல்
இறங்கி வாரும் பரிசுத்தாவியே
உமது சமூகம் சந்தோஷம் மகிழ்ச்சி
அக்கினியால் அபிஷேகியும் – எங்களை

அக்கினி மயமான நாவுகள் இறங்கி
பலத்த காற்று அடிக்கும் இடி முழக்கம்போலே
அஸ்திபாரம் அசைய வாரும் ஆவியே
என் தேவாலயம் நிரம்பி வழியவே

ஒரு மன ஐக்கிய ஆவியை ஊற்றும்
ஒரே இருதயமாக மாறவே
வல்லமையோடு வந்தமருமே – தேவ
அன்பினாலே எம்மை நிரப்புமே

பரிசுத்த பிரசன்னம் அசைவாடட்டும்
பரலோக மகிமை எம் கண்கள் காணட்டும்
ஆத்துமாக்களை வந்து ஆற்றித் தேற்றுமே
ஆனந்தப் பரவசத்தால்