A

Anbin Uruvaanavarea

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே