E

Enthan Navil Pudhu Pattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா

பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்