அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள்
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம்
நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்
மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும்
இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்
நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்
ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே
ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை
Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை
ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு
யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
காலங்காலமாக Christians நாங்க
மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க
மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே
நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு
நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு
உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே
உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்