ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே
என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே
எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய்
உன்னதங்களில் என்னை உட்கார செய்ய
அநுகிரமம் செய்தீர் ஆவியால்
கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்
அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியால்
அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்