A

Athimaram Thulirvidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்