B

Bethlahem Orinilae

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா
தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே
உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே
உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே

வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா
வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே
வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா
இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள்
ஈடிணை இல்லாத ராஜா
தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே
தினம் தினம் மகிழ்ந்திடுவேன்

ஜெபத்தினில் கேட்பவருக்கும் ஜெயத்தினை கொடுப்பவரே
வாழ்வும் வளர்வதும்
உம்மை நினைக்கின்ற போது என்
உள்ளம் உருகுகின்றதய்யா
உருகி ஜெபிக்கின்ற போது என்
மனமும் மகிழ்கின்றதய்யா
எந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில்
நீர் தானே என்னென்றும் துதிப்பேனே