S

Santhosam Santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
இயேசுவின் பாதத்திலே சந்தோஷமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆண்டவரைத் துதிப்போம் எந்நாளுமே

உன்னதமானவர் பலத்தோடு
வாழும் நாளெல்லாம் சந்தோஷமே
உழைக்கும் உயர்வை அளிக்கும் தேவ
வல்லமை இருப்பதால் சந்தோஷமே

சர்வ வல்ல தேவன் இயேசு
நம்மோடு இருப்பாதால் சந்தோஷமே
சருக்கும் எதிரியை நொறுக்கும் தேவ
பட்டயம் இருப்பதால் சந்தோஷமே

கர்த்தாதி கர்த்தர் இயேசு தேவன்
கரத்தில் நாம் இருப்பதால் சந்தோஷமே
காக்கும் துயர் நீக்கும் இயேசு
நாமத்தைத் துதிப்பதால் சந்தோஷமே