D

Devanin Aalayam Thuthigalin

தேவனின் ஆலயம் துதிகளின்

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்

கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா

தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு