என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீரை கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட
ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே
வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலுமே
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலுமே
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே