என் இயேசு நாமம்
என் இயேசு நாமம்
உன்னத நாமம்
நாவு போற்றிடுமே
என் இயேசு நாமம் மேலான நாமம்
கால்கள் மடங்கிடுமே
இயேசுவே ஆண்டவர் என்று
சொல்லி மகிழ்ந்திடுவேன்
என்னை மீட்கவே வந்தவர்
தன்னை பலியாய் தந்தவர்
பாவமில்லா பரிசுத்த நாமம்
உந்தன் நாமமே
பாவியை மன்னிக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்க்கும் இனிய நாமம்
கர்த்தரையல்லால் வேறொரு தேவன்
பூமியில் இல்லையே
கன்மலையல்லால் இரட்சிப்பு இல்லை
அவருக்கே மகிமை செலுத்துவேன்