K

Kaalai Thorum Kartharin

காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்
மனமே ஏன் தியங்குகிறாய்
ஜீவனுள்ள தேவன் மீது
நம்பிக்கை வை

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன் மேல் ஆத்துமா
தாகமாய் இருக்கிறதே

வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும்
நான் மேற்கொள்வேன்
இயேசுவின் நாமத்தினால்

அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர் சமூகம் முன்செல்லுமே