E

Engal Thuthithalin

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்
ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும்
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்

தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்
நிகரே இல்லாதவர் நீர் நித்தியமானவர்
மகிமை நிறைந்தவர் நீர் மகத்துவம் அணிந்தவர்

தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் நடுவினிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
கிருபை உள்ளவர் நீர் துதியில் மகிழ்பவர்
கிரியை செய்பவர் நீர் மகிமை அளிப்பவர்

தேவனே உம் நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் உம் ஆளுகை முடிவதில்லை
ஆவியைப் பொழிபவர் நீர் ஆறுதல் அளிப்பவர்
ஏந்தி சுமப்பவர் நீர் மகிமையில் சேர்ப்பவர்