A

Anuthina Vaazhkaiyilae

அனுதின வாழ்க்கையிலே

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும்

கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
நகருக்காய் தேவன் பரிதபித்தார்
நினிவே அல்ல தர்ஷீஷ் போன
யோனாவை கடலில் வழி மறித்தார்
மூன்று நாள் இரவுமாய் பகலுமாய்
மீனுக்குள் கதறியே அழுதவன்
நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான்
தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ

பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
பணிவது தானே உத்தமமாம்
கீழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
பதவியை அன்று இழந்தானே
தாவீது சிறுவனாய் இருந்தாலும்
கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டான்
கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
தேவ வைராக்கியம் தாவீது பெற்ற வெற்றியே வெற்றியே

யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
பாவங்கள் பெருகியே அழியுதே
பலிகளை விரும்பாத தேவனை
அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
கர்த்தரே தெய்வம் என்றே
நாம் சொல்லுவோம் எலியாபோல்