எதைத் தருவேன்?
எதைத் தருவேன்? காணிக்கையாய் இயேசுவின் அன்பிற்கு ஈடாக
இதயத்தையே நான் தருவேன் இயேசுவின் அன்பிற்கு பரிசாக
அவர் அன்பு ஒருநாளும் குறைந்திடுமோ…….குறைந்திடுமோ
அவர் கருணை நமை விட்டு பிரிந்திடுமோ……….பிரிந்திடுமோ
அன்பு குறைந்தாலும் கருணை பிரிந்தாலும்
வாழ்வு நமக்கிங்கு சாத்தியமோ
நான் மீட்டு இசையாவும் உமக்கே
நான் பாடும் தமிழ் யாவும் உமக்கே
ஆயிரம் பொருட்கள் தந்தாலும் உன் அன்பிற்கு ஏது ஈடு
மாளிகையில் நான் வாழ்ந்தாலும் ஆலயமே என் வீடு
அருள் மழையே….. நனைத்திடுவாய்
உயிர் தாங்கும் உடல் என்றும் உமக்கே
உடல் தாங்கும் புலனைந்தும் உமக்கே
மலரைப் போலவே மணம் வீசவே மண்ணில் என்னைப் படைத்தாய்
கனியைப் போல சுவை கூட்டவே பங்கில் என்னை பணித்தாய்
வான்சுடரே ஒளி தருவாய்