இம்மட்டும் காத்தீரே
இம்மட்டும் காத்தீரே
இனிமேலும் நடத்துவீரே
எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை
எல்லாமே பார்த்து கொள்வீர்
உலகத்தின் தேவைகளை
உம் பாதம் இறக்கி வைத்தேன்
உம் அன்பின் கரம் நீட்டும்
அற்புதமாய் நடத்தும்
உம்மையே பார்த்துவிட்டேன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
இருளெல்லாம் நீங்கிடட்டும்
வெளிச்சம் உதித்திடட்டும்
அதினதின் காலத்திலே -எல்லாம்
நேர்த்தியாய் செய்திடுவீர்
குறைவெல்லாம் மாறிடுமே
நிறைவாக நடத்திடுமே
எந்தன் கன்மலையும் நீர்
துதிகளின் பாத்திரர் நீர்
ஆலயத்தில் நான் அபயம் இட்டால்
என் கூக்குரல் கேட்பவர் நீர்