I

Isai Mazhaiyil

இசைமழையில் தேன்கவி பொழிந்தே

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்

வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே

மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்