திறப்பில் உம்முகம் நிற்கவும்
திறப்பில் உம்முகம் நிற்கவும்
சுவரை அடைக்க நான் சம்மதம்
அழைக்கும் எஜமானர் சந்நிதி
அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்
ஜெபமே ஜெயம் ஜெபமே
ஜெயம் அல்லேலூயா
ஒலிவமலையில் கேட்ட ஓலம்
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
இயேசுவை மாதிரியாக்கிடும்
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
ஜெபவரம் நீர் தந்திடும்
என் சொந்த ஜனத்தின் பாவத்தை
நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்
தலைவன் மோசே நெகேமியா
தானியேல் போல பரிந்துரைக்கும்
விசால உள்ளம் தந்திடும்
எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்
சுயலாப விண்ணப்பம் மறையவும்
பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
உயர்ந்த மனதைத் தந்திடும்