இஸ்ரவேலே பயப்படாதே நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்
எனது கிருபை உனக்குப் போதும்
பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
பூரணமாக என் பெலன் விளங்கும்
எதற்கும் பயம் வேண்டாம்
துன்ப நேரம் சோர்ந்து விடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு