நல்லாசிகள் கூற வந்திடுவீர்
நல்லாசிகள் கூற வந்திடுவீர்
நம் இயேசு ராஜனே
கானா ஊர் கல்யாண விருந்தில் கண்டோம்
கண்டோம் உம் அற்புதத்தை
காலங்களெல்லாம் சிறப்பாக வாழ
வாழ்த்திடும் இரட்சகரே
வாழ்விலும் தாழ்விலும் தாங்கிட வேண்டும்
வாரும் நல் ராஜனே
கீதங்கள் பாடி சிறப்பாக வாழ
சீக்கிரம் வந்திடுவீர்
ஆவியின் வரங்கள் எல்லாமே தந்து
ஆசி கூறிடுவீர்
ஆனந்தமாக உம் பாதம் பணிய
ஆசீ கூறிடுவீர்
அணையாத தீபம் உலகெங்கும் வீச
ஆயத்தம் செய்திடுவீர்